Domain Expert பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை ஆயில் இந்தியா நிறுவனம் (OIL) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆயில் இந்தியா நிறுவனத்தில் (OIL) காலியாக உள்ள Domain Expert பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
Domain Expert பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் Upstream Oil & Gas Industry-ல் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.03.2023 அன்றைய தேதியின் படி, 63 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
இந்த OIL நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.8,000/- முதல் ரூ.10,000/- வரை ஒரு நாளுக்கான சம்பளமாக பெறுவார்கள்.
Domain Expert பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு 01.03.2023 என்ற இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.