ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை - ரூ.19,500/- ஊதியம் || Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ஆயில் இந்தியா நிறுவனத்தில் (OIL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Pharmacist, Paramedical Hospital Technician ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் 01 வருட கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படுவார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆயில் இந்தியா நிறுவன காலிப்பணியிடங்கள்:
- ஆயில் இந்தியா நிறுவனத்தில் (OIL) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Pharmacist - 05 பணியிடங்கள்
- Paramedical Hospital Technician - 05 பணியிடங்கள்
Pharmacist / PHT கல்வி தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10 / 12ம் வகுப்பு தேர்ச்சிக்கு பின் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
Pharmacist / PHT வயது வரம்பு:
- இந்த OIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 22 வயது முதல் 40 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் OBC (NCL) பிரிவினருக்கு 03 ஆண்டுகள் வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
Pharmacist / PHT ஊதியம்:
- Pharmacist பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.19,500/- + ரூ.750/- (PD) மாத ஊதியமாக பெறுவார்கள்.
- Paramedical Hospital Technician பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.16,640/- + ரூ.640/- (PD) மாத ஊதியமாக பெறுவார்கள்.
OIL தேர்வு முறை:
- இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் பின்வரும் தேதிகளில் நடைபெற உள்ள Walk-in-Practical / Skill Test cum Personal Assessment(s) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
- Pharmacist - 15.02.2023
- Paramedical Hospital Technician - 17.02.2023
OIL விண்ணப்பிக்கும் முறை:
இந்த OIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (Biodata) அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து இணைத்து Walk-in-Practical / Skill Test cum Personal Assessment(s)-க்கு வரும்போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.