ஆயில் இந்தியா நிறுவனத்தில் (OIL) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Contractual Boiler Operator (Class I / Class II) பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Walk-in-Practical / Skill Test cum Personal Assessment மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் Walk-in-Practical / Skill Test cum Personal Assessment-ல் கலந்து கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆயில் இந்தியா நிறுவனத்தில் (OIL) Contractual Boiler Operator (Class I) மற்றும் Contractual Boiler Operator (Class II) பணிகளுக்கு தலா 20 பணியிடங்கள் வீதம் மொத்தமாக 40 பணியிடங்கள் காலியாக உள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் 10ம் வகுப்பு + ITI தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
Contractual Boiler Operator (Class I / Class II) பணிக்கான Walk-in-Practical / Skill Test cum Personal Assessment-ல் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து Walk-in-Practical / Skill Test cum Personal Assessment-க்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.