NTRO தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - Degree தேர்ச்சி போதும்!!

By Gokula Preetha - January 31, 2023
14 14
Share
NTRO தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - Degree தேர்ச்சி போதும்!!


தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் (NTRO) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Analyst C பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation விதிமுறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.    

NTRO நிறுவன காலிப்பணியிடங்கள்:

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் (NTRO) Analyst C பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 08 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

Analyst C கல்வி தகுதி:

Analyst C பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor's Degree முடித்தவராக இருக்க வேண்டும்.  

Analyst C முன்னனுபவம்:
  • இந்த NTRO நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Level 10 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் Security, Intelligence Work பதவிகளில் 07 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருப்பின் அவர்களது விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.    
Analyst C வயது வரம்பு:

Analyst C பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு கீழுள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.  

Analyst C ஊதியம்:

இந்த NTRO நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level 11 என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.

NTRO தேர்வு முறை:

Analyst C பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

NTRO விண்ணப்பிக்கும் முறை:

இந்த NTRO நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 30 நாட்களுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.  

Download Notification & Application Form PDF
Share
...
Gokula Preetha