National Technical Research Organisation (NTRO) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Analyst - B பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 28.02.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
NTRO நிறுவனத்தில் Analyst - B பணிக்கு என மொத்தமாக 67 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Analyst - B பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Bachelor's Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
இந்த NTRO நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Level-8 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்தது 03 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Analyst - B பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
இந்த NTRO நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Pay Matrix Level - 10 என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.
Analyst - B பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation / Absorption விதிமுறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
இந்த NTRO நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (28.02.2023) அனுப்ப வேண்டும்.