Nurse - A, Pathology Lab Technician, Pharmacist B போன்ற பல்வேறு பணிகளுக்கு என ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை இந்திய அணுசக்தி கழகம் (NPCIL) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 193 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 08.02.2023 அன்று முதல் பெறப்பட உள்ளது இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரிகளில் பணி சார்ந்த பாடப்பிரிவில் 12ம் வகுப்பு, Diploma, Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த NPCIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.
இந்த NPCIL நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 08.02.2023 அன்று முதல் 28.02.2023 அன்று வரை https://www.npcilcareers.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.