இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Java Developer, Senior Associate Monitoring & Control பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தில் (NPCI) காலியாக உள்ள Java Developer, Senior Associate Monitoring & Control பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E, B.Tech, BCA, M.Tech Degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த NPCI நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் 02 ஆண்டுகள் முதல் 07 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
இந்த NPCI நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.