NIT Trichy என்னும் தேசிய தொழில்நுட்ப கழகத்தில் இருந்து புதிய சுற்றறிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை மூலம் Junior Research Fellow (JRF) பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்ற தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
JRF பணி குறித்த தகவல்கள்:
வெற்றிடங்கள்: திருச்சி மாவட்ட தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (NIT Trichy) செயல்பட்டு வரும் Sustainable Energy - Efficient Green Ammonia Production by Plasma - Water Interface திட்டத்தின் கீழ் Junior Research Fellow (JRF) பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
கல்வி / படிப்பு பற்றிய விவரங்கள்: Junior Research Fellow (JRF) பணிக்கு அரசு கல்வி நிறுவனங்களில் Thermal Engineering, Chemical Engineering, Environmental Engineering பாடப்பிரிவில் ME / M.Tech டிகிரி முடித்தவர்கள் தேவைப்படுகிறார்கள்.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பதிவுதாரர்கள் CSIR - UGC NET அல்லது GATE தகுதி தேர்வில் வெற்றி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
வயது பற்றிய விவரம்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை.
ஊதியம் பற்றிய விவரம்: Junior Research Fellow (JRF) பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.31,000/- முதல் ரூ.35,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
பணிக்கான கால அளவு: இப்பணிக்கு தேர்வாகும் நபர்கள் குறைந்தது 03 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் பணிபுரிய இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு விவரங்கள்: Junior Research Fellow (JRF) பணிக்கு பொருத்தமான நபர்கள் நேர்முகத் தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
விண்ணப்பிப்பதற்கான முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள NIT Trichy-ன் அலுவலக முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.
இறுதி நாள்: Junior Research Fellow (JRF) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 08.03.2023 என்ற இறுதி நாளுக்குள் தங்களது விண்ணப்பத்தை அனுப்பி பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.