Degree / Diploma முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலை - ரூ. 57,525/- ஊதியம்!
மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான NIPMR நிறுவனம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Physiatrist, Special Educator போன்ற பல்வேறு பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 15.02.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
NIPMR நிறுவன காலிப்பணியிடங்கள்:
- NIPMR நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Physiatrist - 01 பணியிடம்
- Developmental Paediatrician - 01 பணியிடம்
- Clinical Psychologist - 02 பணியிடங்கள்
- Special Educator (ASD) - 01 பணியிடம்
- Special Educator - 01 பணியிடம்
- Physiotherapist - 01 பணியிடம்
- Ear Mould Lab Technician - 01 பணியிடம்
NIPMR பணிக்கான கல்வி விவரம்:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.
- Physiatrist - MBBS, MD PMR
Developmental Paediatrician - MBBS, MD
- Clinical Psychologist - M.Sc, M.Phil
- Special Educator (ASD) - Degree + B.Ed / D.Ed
- Special Educator - Degree + B.Ed / D.Ed
- Physiotherapist - Bachelor's Degree
- Ear Mould Lab Technician - Diploma
NIPMR பணிக்கான வயது வரம்பு:
- Special Educator, Special Educator (ASD), Physiotherapist, Ear Mould Lab Technician பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
- மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
NIPMR பணிக்கான ஊதியம்:
- Physiatrist பணிக்கு ரூ.38,075/- + ரூ.57,525/- என்றும்,
- Developmental Paediatrician பணிக்கு ரூ.38,075/- + ரூ.57,525/- என்றும்,
- Clinical Psychologist பணிக்கு ரூ.36,000/- என்றும்,
- Special Educator (ASD) பணிக்கு ரூ.30,995/- என்றும்,
- Special Educator பணிக்கு ரூ.28,100/- என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.
- Physiotherapist பணிக்கு ரூ.1,205/- என்றும்,
- Ear Mould Lab Technician பணிக்கு ரூ.755/- என்றும் ஒரு நாளுக்கான ஊதியமாக வழங்கப்படும்.
NIPMR தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
என எதிர்பார்க்கப்படுகிறது.
NIPMR விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த NIPMR நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://cmdkerala.recruitopen.com/custom-signup/NIPMR3 என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (15.02.2023) சமர்ப்பிக்க வேண்டும்.