NHPC நிறுவனத்தில் 60+ காலிப்பணியிடங்கள் - Degree / Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

By Gokula preetha - February 2, 2023
14 14
Share
NHPC நிறுவனத்தில் 60+ காலிப்பணியிடங்கள் - Degree / Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

NHPC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Graduate Apprentices மற்றும் Diploma Apprentices பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 15.02.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.    

NHPC நிறுவன பணியிடங்கள்:

NHPC நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Graduate Apprentices - 16 பணியிடங்கள்
  • Diploma Apprentices - 48 பணியிடங்கள்
Apprentices கல்வி விவரம்:
  • Graduate Apprentices பணிக்கு அரசு அல்லது AICTE அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் Graduate Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Diploma Apprentices பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Apprentices வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Apprentices உதவித்தொகை:
  • Graduate Apprentices பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.9,000/- மாத உதவித் தொகையாக பெறுவார்கள்.
  • Diploma Apprentices பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Apprenticeship விதிமுறைப்படி மாத உதவித்தொகை பெறுவார்கள்.    
NHPC நிறுவன தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

NHPC நிறுவன விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த NHPC நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (15.02.2023) விரைவு தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form PDF 1

Download Notification & Application Form PDF 2

Share
...
Gokula preetha