இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் (NHAI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Deputy Manager (Vigilance) பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் இன்று (14.02.2023) முதல் Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் (NHAI) காலியாக உள்ள Deputy Manager (Vigilance) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
Deputy Manager (Vigilance) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், யூனியன் பிரதேச நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 03 ஆண்டுகள் முதல் 06 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
இந்த NHAI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 56 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
Deputy Manager (Vigilance) பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level - 10 என்ற ஊதிய அளவின் படி, ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை மாத சம்பளமாக கொடுக்கப்படும்.
இந்த NHAI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Deputy Manager (Vigilance) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 14.02.2023 அன்று முதல் 31.03.2023 அன்று வரை https://nhai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரி மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.