NCRTC நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Sr. Dy. General Manager / Architect, General Manager / Architect, Addl. General Manager / Architect ஆகிய பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Arch Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
இந்த NCRTC நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரயில்வே துறை சார்ந்த நிறுவனங்களில் பணிக்கு சார்ந்த துறைகளில் E2 / L9 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் Executive பதவிகளில் குறைந்தபட்சம் 11 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 17 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist, Interaction மற்றும் Interview வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த NCRTC நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் https://ncrtc.in/ என்ற இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக இறுதி நாளுக்குள் (27.02.2023) பதிவு செய்து கொள்ளலாம்.