NCRTC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் General Manager (ARS) பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.2,60,000/- ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
General Manager (ARS) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே NCRTC நிறுவனத்தில் காலியாக உள்ளது.
இந்த NCRTC நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, B.Arch, M.Arch, M.Planning ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரயில்வே துறை சார்ந்த நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் E2 / L9 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் Executive பதவிகளில் குறைந்தபட்சம் 17 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
General Manager (ARS) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 50 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
இந்த NCRTC நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர் E7 என்ற ஊதிய அளவின் படி, குறைந்தபட்சம் ரூ.1,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,60,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்.
இப்பணிக்கு தகுதியான நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.