தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தில் (NCDC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Young Professional - I (Marketing) பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தற்போது வெளியான அறிவிப்பில், NCDC நிறுவனத்தில் Young Professional - I (Marketing) பணிக்கு என 51 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் Marketing பாடப்பிரிவில் MBA பட்டம் பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
Young Professional - I (Marketing) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 32 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.
இந்த NCDC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் Marketing துறையில் குறைந்தபட்சம் 03 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பின் முன்னுரிமை தரப்படும்.
இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.50,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
Young Professional - I (Marketing) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மற்றும் Group Discussion மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த NCDC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் 21 நாட்களுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து NCDC நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.