NABARD வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள NABFINS நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Customer Service Officer பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Customer Service Officer பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் NABARD - NABFINS நிறுவனத்தில் காலியாக உள்ளது.
இந்த NABARD - NABFINS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் PUC அல்லது 10ம் / 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
Customer Service Officer பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 01 ஆண்டு முதல் 03 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனுபவம் இல்லாதவராக இருப்பின் அவர்களது விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
இந்த NABARD - NABFINS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.
Customer Service Officer பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த NABARD - NABFINS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் முதலில் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து careers@nabfins.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுபவ வேண்டும்.