உள்துறை அமைச்சகத்தில் (MHA) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Consultant பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் 01 வருட கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
Senior Consultant பணிக்கு என 07 பணியிடங்கள் உள்துறை அமைச்சகத்தில் (MHA) காலியாக உள்ளது.
இந்த உள்துறை அமைச்சகம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள் அல்லது PSU நிறுவனங்களில் Land Management, Survey Analysis of Survey Data போன்ற பணி சார்ந்த துறைகளில் Level - 12 / 13 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் Deputy Secretary / Director பதவிகளில் அல்லது அதற்கு இணையான பதவிகளில் குறைந்தது 10 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
மேலும் இப்பணிக்கு MBA முடித்தவர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி, திறமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
இந்த உள்துறை அமைச்சகம் (MHA) சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலையும் இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 15 நாட்களுக்குள் தபால் செய்ய வேண்டும்.