Project Fellow பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை சென்னைப் பல்கலைக்கழகம் (Madras University) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தற்போது வெளியான அறிவிப்பில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் (Madras University) Project Fellow பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் Biotechnology, Biochemistry, Botany, Zoology பாடப்பிரிவில் M.Sc அல்லது Ph.D பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
Project Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
இந்த சென்னைப் பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.10,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த Madras University சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (Curriculum Vita) தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (31.01.2023) தபால் செய்ய வேண்டும்.