JIPMER பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை - 12ம் வகுப்பு / டிகிரி தேர்ச்சி போதும்!  

By Gokula Preetha - January 24, 2023
14 14
Share
JIPMER பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை - 12ம் வகுப்பு / டிகிரி தேர்ச்சி போதும்!  


Research Assistant மற்றும் Data Entry Operator பணிகளுக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை JIPMER பல்கலைக்கழகம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 31.01.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பல்கலைக்கழகம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

JIPMER பல்கலைக்கழக பணியிடங்கள்:

JIPMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Research Assistant மற்றும் Data Entry Operator பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

RA / DEO கல்வி விவரம்:
  • Research Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree அல்லது Master Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.  
RA / DEO வயது விவரம்:
  • Research Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
RA / DEO ஊதிய விவரம்:
  • Research Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.31,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • Data Entry Operator பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.18,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
JIPMER தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

JIPMER விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த JIPMER பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கான விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து icmrvte@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (31.01.2023) வந்து சேருமாறு அனுப்ப வேண்டும். 

Download Notification PDF
Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us