JIPMER பல்கலைக்கழகத்தில் ரூ.35,400/- ஊதியத்தில் வேலை - Degree / Diploma முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு!
Group B மற்றும் Group C Post கீழ்வரும் பணிகளுக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை JIPMER பல்கலைக்கழகம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 22.02.2023 அன்று முதல் வரவேற்க்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
JIPMER பல்கலைக்கழக பணியிடங்கள்:
JIPMER பல்கலைக்கழகத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
Group B:
- Dental Hygienist - 01 பணியிடம்
- Junior Translation Officer - 01 பணியிடம்
- Medical Social Worker - 06 பணியிடங்கள்
- Speech Therapist - 02 பணியிடங்கள்
- X-Ray Technician - 04 பணியிடங்கள்
Group C:
- Anesthesia Technician - 08 பணியிடங்கள்
- Audiology Technician - 01பணியிடம்
- Dental Mechanic - 01 பணியிடம்
- Junior Administrative Assistant - 32 பணியிடங்கள்
- Ophthalmic Technician - 01 பணியிடம்
- Perfusion Assistant - 01 பணியிடம்
- Pharmacist - 05 பணியிடங்கள்
- Physiotherapy Technician - 02 பணியிடங்கள்
- Stenographer Grade - II - 03 பணியிடங்கள்
- URO Technician - 01 பணியிடம்
Group B / Group C கல்வி விவரம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, Diploma, B.Sc, Graduate Degree, Master Degree ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
Group B / Group C வயது விவரம்:
- Dental Hygienist / Medical Social Worker பணிகளுக்கு 35 வயது எனவும்,
- Audiology Technician பணிக்கு 25 வயது எனவும்,
- Stenographer Grade - II பணிக்கு 27 வயது எனவும்,
- மற்ற பணிகளுக்கு 30 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Group B / Group C சம்பளம்:
- Group B Post கீழ்வரும் பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,400/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
- Group C Post கீழ்வரும் பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.19,900/- முதல் ரூ.29,200/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
JIPMER தேர்வு முறை:
இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Written Test மற்றும் Skill Test வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
JIPMER விண்ணப்ப கட்டணம்:
- UR / OBC / EWS - ரூ.1500/-
- SC / ST - ரூ.1,200/-
- PWBD - விண்ணப்ப கட்டணம் கிடையாது
JIPMER விண்ணப்பிக்கும் முறை:
இந்த JIPMER பல்கலைக்கழகம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் 22.02.2023 அன்று முதல் 18.03.2023 அன்று வரை https://jipmer.edu.in/announcement/jobs என்ற இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.