தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் (TNRD) கீழ் செயல்பட்டு வரும் தூத்துக்குடி, ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், கோவில்பட்டி, கயத்தார், ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் மற்றும் புதூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களின் காலிப்பணியிடங்கள் குறித்த வேலைவாய்ப்பு விளம்பரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரங்களின் படி, அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர், இரவுக்காவலர் ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேவைப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிப்பதற்கான எளிய வழிமுறை போன்றவை கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை |
பணியின் பெயர்: |
அலுவலக உதவியாளர் (Office Assistant), ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver), இரவுக்காவலர் (Night Watchman) |
காலிப்பணியிடங்கள்: |
30 பணியிடங்கள் |
பணியமர்த்தப்படும் இடங்கள்: |
தூத்துக்குடி, ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், கோவில்பட்டி, கயத்தார், ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர் |
கல்வி விவரம்: |
08ம் வகுப்பு மற்றும் தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும் |
வயது விவரம்: |
18 வயது முதல் 32 வயது வரை |
வயது தளர்வு: |
SC / ST - 05 ஆண்டுகள், BC / MBC / DNC - 03 ஆண்டுகள் |
மாத சம்பளம்: |
ரூ.15,700/- முதல் ரூ.62,000/- வரை |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: |
நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு |
விண்ணப்பிக்கும் முறை: |
Offline |
தபால் செய்ய வேண்டிய முகவரி: |
அறிவிப்பில் காணவும் |
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: |
07.03.2023 |
விண்ணப்பிக்க பதிவு முடிவடையும் நாள்: |
07.04.2023 |
Download Notification & Application Link: |