ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!

By Gokula Preetha - February 20, 2023
14 14
Share
ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!


ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் உள்ள IRCTC நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. AGM / Infra பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 20.03.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.    

IRCTC நிறுவன காலிப்பணியிடங்கள்:

IRCTC நிறுவனத்தில் காலியாக உள்ள AGM / Infra பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

AGM / Infra கல்வி தகுதி:

AGM / Infra பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ரயில்வே துறை சார்ந்த நிறுவனங்களில் கட்டுமான துறையில் JA Grade கீழ்வரும் Civil Engineering பதவியில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் படி போதிய ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

AGM / Infra வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 55 வயதுக்கு கீழுள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

AGM / Infra சம்பளம்:

இந்த IRCTC நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.  

IRCTC நிறுவன தேர்வு செய்யும் விதம்:

AGM / Infra பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCTC நிறுவன விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் deputation@irctc.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (20.03.2023) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.  

Download Notification & Application Form PDF
Share
...
Gokula Preetha