IOCL நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான சுற்றறிக்கையில் Specialist Doctors பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு ஆர்வமுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
IOCL நிறுவனத்தில் காலியாக உள்ள Specialist Doctors பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Specialist Doctors பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS, MD, MDS, DNB Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் மருத்துவராக குறைந்தது 10 ஆண்டுகள் சேவை செய்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
இந்த IOCL நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.4,500/- ஒரு வருகைக்கான ஊதியமாக (இரண்டு மணி நேரத்திற்கு) பெறுவார்கள்.
Specialist Doctors பணிக்கு தகுதியான நபர்கள் 15.02.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட படி தங்களது விண்ணப்பத்தை (CV) தயார் செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும்போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.