இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய சுற்றறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Engineering Assistant - IV, Junior Technical Assistant - IV போன்ற பல்வேறு பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 01.03.2023 அன்று முதல் பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் 10ம் வகுப்பு, Diploma, ITI, B.Sc ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் ரூ.1,05,000/-வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
இந்த IOCL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Skill Test, Proficiency Test, Physical Test ஆகிய தேர்வு முறைகளின் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் https://www.iocl.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (20.03.2023) சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (20.04.2023) சமர்ப்பிக்க வேண்டும்.