Indigo நிறுவனத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு - 10ம் / 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் || நேர்காணல் மட்டுமே!

By Gokula preetha - February 6, 2023
14 14
Share
Indigo நிறுவனத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு - 10ம் / 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் || நேர்காணல் மட்டுமே!

Lead Cabin Attendant ATR பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை Indigo நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.  

Indigo காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், Indigo நிறுவனத்தில் Lead Cabin Attendant ATR பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lead Cabin Attendant ATR கல்வி தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் 10ம் / 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழியில் சரளமாக பேச மற்றும் எழுத தெரிந்தவராக இருக்க வேண்டும்.
Lead Cabin Attendant ATR வயது வரம்பு:

Lead Cabin Attendant ATR பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 21 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

Lead Cabin Attendant ATR அனுபவம்:

இந்த Indigo நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் 02 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Indigo தேர்வு செய்யும் விதம்:

Lead Cabin Attendant ATR பணிக்கு தகுதியான நபர்கள் 06.02.2023 அன்று முதல் 28.02.2023 அன்று வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Indigo விண்ணப்பிக்கும் விதம்:

இந்த Indigo நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.     

Download Notification & Application Link 1

Download Notification & Application Link 2

Share
...
Gokula preetha