இந்தியன் வங்கியில் காத்திருக்கும் SO பணியிடம் - 200+ காலிப்பணியிடங்கள் || ரூ.89,890/- ஊதியம்!
இந்தியன் வங்கியில் (Indian Bank) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Specialist Officers பிரிவின் கீழ் வரும் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 203 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 16.02.2023 அன்று முதல் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்தியன் வங்கி காலிப்பணியிடங்கள்:
- இந்தியன் வங்கியில் (Indian Bank) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Chief Manager (IV) - 50 பணியிடங்கள்
- Senior Manager (III) - 61 பணியிடங்கள்
- Manager (II) - 42 பணியிடங்கள்
- Assistant Manager (I) - 50 பணியிடங்கள்
Indian Bank பணிக்கான கல்வி தகுதி:
இந்த வங்கி துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த துறைகளில் Graduate Degree, BE, B.Tech, CA, ICWA, CFA, MBA, MCA, Post Graduate Degree, Post Graduate Diploma, MMS, PGDBA, PGDBM, PGPM, PGDM ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.
Indian Bank பணிக்கான வயது வரம்பு:
- Chief Manager (IV) பணிக்கு 29 வயது முதல் 49 வயது வரை எனவும்,
- Senior Manager (III) பணிக்கு 27 வயது முதல் 38 வயது வரை எனவும்,
- Manager (II) பணிக்கு 25 வயது முதல் 35 வயது வரை எனவும்,
- Assistant Manager (I) பணிக்கு 21 வயது முதல் 30 வயது வரை எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
Indian Bank பணிக்கான ஊதியம்:
- Chief Manager (IV) பணிக்கு ரூ.76,010/- முதல் ரூ.89,890/- வரை என்றும்,
- Senior Manager (III) பணிக்கு ரூ.63,840/- முதல் ரூ.78,230/- வரை என்றும்,
- Manager (II) பணிக்கு ரூ.48,170/- முதல் ரூ.69,810/- வரை என்றும்,
- Assistant Manager (I) பணிக்கு ரூ.36,000/- முதல் ரூ.63,840/- வரை என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.
Indian Bank தேர்வு முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist, Interview மற்றும் Written Test (Online Test) ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Indian Bank விண்ணப்ப கட்டணம்:
- SC / ST / PWBD - ரூ.175/-
- மற்ற நபர்களுக்கு - ரூ.850/-
Indian Bank விண்ணப்பிக்கும் முறை:
இந்த இந்தியன் வங்கி சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 16.02.2023 அன்று முதல் 28.02.2023 அன்று வரை https://www.indianbank.in/career/#! என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.