இந்திய ராணுவத்தில் 130+ காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.63,200/- || 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

By Gokula Preetha - February 8, 2023
14 14
Share
இந்திய ராணுவத்தில் 130+ காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.63,200/- || 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!!


இந்திய ராணுவத்தில் (Indian Army) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. MTS, Mess Waiter, Barber போன்ற பல்வேறு பணிகளுக்கு என 135 பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.      

இந்திய ராணுவ பணியிடங்கள்:
  • இந்திய ராணுவத்தில் (Indian Army) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • MTS (Safaiwala) - 28 பணியிடங்கள்
  • MTS (Messenger) - 03 பணியிடங்கள்
  • Mess Waiter - 22 பணியிடங்கள்
  • Barber - 09 பணியிடங்கள்
  • Washer Man - 11 பணியிடங்கள்
  • Masalchi - 11 பணியிடங்கள்
  • Cooks - 51 பணியிடங்கள்
Indian Army கல்வி தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களின்  விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிகளுக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.

Indian Army வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Indian Army சம்பளம்:
  • Cooks பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.  
  • மற்ற பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.      
இந்திய ராணுவ தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Written Test, Practical Test / Trade Test வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்திய ராணுவ விண்ணப்பிக்கும் முறை:

இந்த ராணுவ துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 21 நாட்களுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும். 

Download Notification & Application Link
Share
...
Gokula Preetha