தபால் துறையில் (Indian Post) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Gramin Dak Sevaks (GDS / Branch Postmaster (BPM) மற்றும் Assistant Branch Postmaster (ABPM / Dak Sevak) பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 40,889 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் இன்று (27.01.2023) முதல்பெறப்பட்டு வருகிறது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Gramin Dak Sevaks (GDS / Branch Post Master (BPM) மற்றும் Assistant Branch Postmaster (ABPM / Dak Sevak) பணிகளுக்கு என மொத்தமாக 40,889 பணியிடங்கள் இந்திய தபால் துறையில் (India Post) காலியாக உள்ளது.
இந்த இந்திய தபால் துறை சார்ந்த பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இந்த இந்திய தபால் துறை சார்ந்த பணிகளுக்கு தகுதியான நபர்கள் Shortlist, Merit list மற்றும் Document Verification ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 16.02.2023 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.