வருமான வரித் துறையில் பணிபுரிய வாய்ப்பு -  10ம் வகுப்பு / டிகிரி முடித்தவர்கள் தேவை || ரூ.1,42,400/- ஊதியம்!  

By Gokula preetha - February 23, 2023
14 14
Share
வருமான வரித் துறையில் பணிபுரிய வாய்ப்பு -  10ம் வகுப்பு / டிகிரி முடித்தவர்கள் தேவை || ரூ.1,42,400/- ஊதியம்!  

Income Tax Inspector, Tax Assistant, Multi Tasking Staff பணிகளுக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை வருமான வரித்துறை (Income Tax Department) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,42,400/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.    

வருமான வரித்துறை பணியிடங்கள்:

வருமான வரித்துறையில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Income Tax Inspector - 03 பணியிடங்கள்
  • Tax Assistant - 07 பணியிடங்கள்
  • Multi Tasking Staff - 10 பணியிடங்கள்
வருமான வரித்துறை பணிக்கான கல்வி விவரம்:
  • Income Tax Inspector, Tax Assistant பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் Bachelor's Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Multi Tasking Staff பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வருமான வரித்துறை பணிக்கான  வயது விவரம்:
  • Income Tax Inspector பணிக்கு 18 வயது முதல் 30 வயது வரை என்றும்,
  • Tax Assistant பணிக்கு 18 வயது முதல் 27 வயது வரை என்றும்,
  • Multi Tasking Staff பணிக்கு 18 வயது முதல் 25 வயது என்றும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை பணிக்கான ஊதிய விவரம்:
  • Income Tax Inspector பணிக்கு Pay Level - 7 என்ற ஊதிய அளவின் படி, ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை எனவும்,  
  • Tax Assistant பணிக்கு Pay Level - 4 என்ற ஊதிய அளவின் படி, ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை எனவும்,  
  • Multi Tasking Staff பணிக்கு Pay Level - 1 என்ற ஊதிய அளவின் படி, ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை எனவும் மாத ஊதியமாக தரப்படும்.  
வருமான வரித்துறை தேர்வு செய்யும் முறை:
  • Shortlist
  • Document Verification
  • Trial / Written Test
வருமான வரித்துறை விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த வருமான வரித்துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 17.03.2023 என்பது இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும். மேலும் North Eastern States, Andaman Nicobar Islands, Lakshadweep, Ladakh, Jammu Kashmir பகுதிகளில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு 31.03.2023 அன்று வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  

Download Notification & Application Form PDF 
Share
...
Gokula preetha