IIT Madras நிறுவனத்தில் ரூ.70,000/- ஊதியத்தில் வேலை - Online விண்ணப்பங்கள் வரவேற்பு!

By Gokula Preetha - February 20, 2023
14 14
Share
IIT Madras நிறுவனத்தில் ரூ.70,000/- ஊதியத்தில் வேலை - Online விண்ணப்பங்கள் வரவேற்பு!  


IIT Madras நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Post - Doctoral Researcher பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.70,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

IIT Madras பணியிடங்கள்:

IIT Madras நிறுவனத்தில் காலியாக உள்ள Post - Doctoral Researcher பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Post - Doctoral Researcher கல்வி விவரம்:
  • Chemical Engineering, Physics, Material Science, Chemistry, Biotechnology போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Ph.D பட்டத்தை அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே Post - Doctoral Researcher பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் NET / GATE போன்ற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.          
Post - Doctoral Researcher வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Post - Doctoral Researcher சம்பள விவரம்:

இந்த IIT Madras நிறுவன பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.45,000/- முதல் ரூ.70,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

IIT Madras தேர்வு செய்யும் முறை:

Post - Doctoral Researcher பணிக்கு தகுதியான நபர்கள் Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

IIT Madras விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த IIT Madras நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். 06.03.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.     

Download Notification Link
Online Application Link

 

Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us