IDBI வங்கியில் இருந்து தற்போது வெளியான சுற்றறிக்கையில் Specialist Cadre Officer கீழ்வரும் பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 114 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 21.02.2023 அன்று முதல் Online வாயிலாக பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
IDBI வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer கீழ்வரும் பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 114 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BCA, B.Sc, BE, B.Tech, M.Sc, MCA, ME, M.Tech, MBA, MA ஆகிய டிகிரிகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Group Discussion மற்றும் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த IDBI வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21.02.2023 அன்று முதல் 03.03.2023 அன்று வரை https://www.idbibank.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.