IDBI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Manager பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு என மொத்தமாக 600 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager பணிக்கு என மொத்தமாக 600 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.01.2023 அன்றைய தினத்தின் படி, 21 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
இந்த IDBI வங்கி சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.36,000/- ஒரு மாதத்திற்கான ஊதியமாக பெறுவார்கள்.
Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://ibpsonline.ibps.in/idbiamfeb23/ என்ற இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். 28.02.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.