ICMR நிறுவனத்தில் காத்திருக்கும் SRF பணியிடம் - உடனே விண்ணப்பியுங்கள்!!

By Gokula preetha - February 6, 2023
14 14
Share
ICMR நிறுவனத்தில் காத்திருக்கும் SRF பணியிடம் - உடனே விண்ணப்பியுங்கள்!!

Senior Research Fellow (SRF) பணிக்கு என ICMR நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை JIPMER பல்கலைக்கழகம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

ICMR நிறுவன காலிப்பணியிடங்கள்:

ICMR நிறுவனத்தில் Senior Research Fellow (SRF) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Senior Research Fellow கல்வி தகுதி:
  • அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Bioinformatics, Computational Biology பாடப்பிரிவில் M.Sc, M.Tech Degree முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
  • விண்ணப்பதாரர்கள் NET / GATE போன்ற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.    
Senior Research Fellow வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 35 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

Senior Research Fellow ஊதியம்:

Senior Research Fellow (SRF) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ICMR நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

ICMR நிறுவன தேர்வு முறை:

01.03.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

ICMR நிறுவன விண்ணப்பிக்கும் முறை:

இந்த ICMR நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 27.02.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.   

Download Notification & Application Link

Share
...
Gokula preetha