ICMR நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Officer, Project Assistant பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 10.03.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Project Officer பணிக்கு என 01 பணியிடமும், Project Assistant பணிக்கு என 02 பணியிடங்களும் ICMR நிறுவனத்தில் காலியாக உள்ளது.
இந்த ICMR நிறுவன பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree அல்லது Master Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Online Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ICMR நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து nutritionadmn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (10.03.2023) அனுப்ப வேண்டும்.