ICMR நிறுவனத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - ரூ.32,000/- ஊதியம் || 12ம் வகுப்பு / டிகிரி முடித்தவர்கள் தேவை!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Project Officer / Assistant மற்றும் Data Entry Operator பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 01.03.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ICMR காலிப்பணியிடங்கள்:
Project Officer / Assistant மற்றும் Data Entry Operator பணிகளுக்கு தலா 01 பணியிடம் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் ICMR நிறுவனத்தில் காலியாக உள்ளது.
Project Officer / Assistant, DEO கல்வி தகுதி:
- Project Officer / Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
- Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் MS - Office தெரிந்தவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
Project Officer / Assistant, DEO வயது வரம்பு:
- Project Officer / Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.03.2023 அன்றைய தினத்தின் படி, 30 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.03.2023 அன்றைய தினத்தின் படி, 25 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Project Officer / Assistant, DEO சம்பளம்:
- Project Officer / Assistant பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.32,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
- Data Entry Operator பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.17,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்
ICMR தேர்வு முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview, Personal Discussion மற்றும் Document Verification வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICMR விண்ணப்பிக்கும் முறை:
இந்த ICMR நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து rcnicmr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (01.03.2023) அனுப்ப வேண்டும்.