NIRT நிறுவனத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்!
மத்திய அரசு நிறுவனமான ICMR கீழ் செயல்பட்டு வரும் National Institute for Research in Tuberculosis (NIRT) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Junior Medical Officer, Project Technician - II பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Walk - in Written Test / Interview வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விருப்பமுள்ள நபர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ICMR-NIRT காலிப்பணியிடங்கள்:
- ICMR-NIRT நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Project Junior Medical Officer - 01 பணியிடம்
- Project Technician - II (Health Assistant) - 02 பணியிடங்கள்
- Project Technician - II (Field Assistant) - 02 பணியிடங்கள்
ICMR-NIRT கல்வி தகுதி:
- Project Junior Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
Project Technician - II பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு அல்லது B.Sc தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
ICMR-NIRT வயது வரம்பு:
- Project Junior Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- Project Technician - II பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
ICMR-NIRT ஊதியம்:
- Project Junior Medical Officer பணிக்கு ரூ.60,000/- என்றும்,
- Project Technician - II பணிக்கு ரூ.17,000/- என்றும் மாத ஊதியமாக பெறுவார்கள்.
ICMR-NIRT தேர்வு முறை:
இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் 03.03.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள Walk - in Written Test / Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICMR-NIRT விண்ணப்பிக்கும் முறை:
இந்த ICMR-NIRT நிறுவன பணிகளுக்கான Walk - in Written Test / Interview -ல் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிக்கான விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலையும் இணைத்து Walk - in Written Test / Interview-க்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.