Scientist C (Medical) பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான ICMR - NIIH நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.51,000/- ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ICMR - NIIH நிறுவனத்தில் காலியாக உள்ள Scientist C (Medical) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
Scientist C (Medical) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் MBBS பட்டம் பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ICMR - NIIH நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.51,000/- + ரூ.6,660/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
Scientist C (Medical) பணிக்கு தகுதியான நபர்கள் 10.02.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களின் நகலையும் இணைத்து நேர்காணல் நடைபெறும் நாள் அன்று காலை 9.30 மணிக்கு நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.