ICMAI நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Experts / Consultants பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
ICMAI நிறுவனத்தில் Experts / Consultants கீழ்வரும் Senior Management, Middle Management, Junior Management, Operational Support, Research Assistant ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Experts / Consultants கீழ்வரும் பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் CA, CMA, CS, MBA, CPA அல்லது Post Graduate பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 05 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 30 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.
இந்த ICMAI நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Experts / Consultants கீழ்வரும் பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது (CV) விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலையும் இணைத்து hr1@icmai.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.02.2023 என்ற இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.