ICFRE நிறுவனத்தில் வேலை - ரூ.31,000/- மாத ஊதியம் || நேர்காணல் மட்டுமே!  

By Gokula Preetha - February 18, 2023
14 14
Share
ICFRE நிறுவனத்தில் வேலை - ரூ.31,000/- மாத ஊதியம் || நேர்காணல் மட்டுமே!  


Junior Research Fellow, Junior Project  Fellow, Project Assistant பணிகளுக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுமம் (ICFRE) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  

ICFRE பணியிடங்கள்:
  • ICFRE நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • Junior Research Fellow - 04 பணியிடங்கள்
  • Junior Project  Fellow - 11 பணியிடங்கள்
  • Project Assistant - 05 பணியிடங்கள்
ICFRE பணிக்கான கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Junior Research Fellow - M.Sc + NET
  • Junior Project  Fellow -  B.Tech, M.Sc, Ph.D
  • Project Assistant - Graduate Degree, B.Sc, M.Sc
ICFRE பணிக்கான வயது விவரம்:
  • Junior Research Fellow / Junior Project  Fellow பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28  வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
  • Project Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு கிடையாது.  
ICFRE பணிக்கான ஊதிய விவரம்:
  • Junior Research Fellow பணிக்கு ரூ.20,000/- முதல் ரூ.31,000/- வரை என்றும்,  
  • Junior Project  Fellow பணிக்கு ரூ.20,000/- என்றும்,
  • Project Assistant பணிக்கு ரூ.19,000/-  முதல் ரூ.20,000/- வரை என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.
ICFRE தேர்வு செய்யும் முறை:

இந்த ICFRE நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் 02.03.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ICFRE விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (Biodata) தேவையான சான்றிதழ்களின் நகலையும் இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.  

Download Notification PDF
Share
...
Gokula Preetha