HMT நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!
இயந்திரங்கள் மற்றும் கருவிகள் உற்பத்தி செய்வதில் முன்னணி வகிக்கும் நிறுவனமான HMT Machine Tools Limited ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Project Deputy Engineer மற்றும் Project Officer பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 25.02.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
HMT Machine Tools Limited காலிப்பணியிடங்கள்:
- HMT Machine Tools Limited-ல் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Project Deputy Engineer (Mechanical) - 03 பணியிடங்கள்
- Project Deputy Engineer (Electrical) - 03 பணியிடங்கள்
- Project Officer (HR) - 01 பணியிடம்
- Project Officer (Finance) - 01 பணியிடம்
- Project Officer (Legal) - 01 பணியிடம்
Pr. Deputy Engineer / Pr. Officer கல்வி தகுதி:
- Project Deputy Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது AICTE அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
- Project Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது AICTE அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் MBA, MHRM, PGDM, CA, CMA, ICWA, LLB தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
Pr. Deputy Engineer / Pr. Officer வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 32 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.
Pr. Deputy Engineer / Pr. Officer ஊதியம்:
Project Deputy Engineer, Project Officer பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் PS-III / 8600-250-14600 (1997 Pay-Scale) என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.
HMT Machine Tools Limited தேர்வு செய்யும் விதம்:
இந்த HMT Machine Tools Limited பணிகளுக்கு தகுதியான நபர்கள் Personal Interview மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
HMT Machine Tools Limited விண்ணப்ப கட்டணம்:
- General / EWS / OBC - ரூ.750/-
- SC / ST - ரூ.250/-
HMT Machine Tools Limited விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (25.02.2023) தபால் செய்ய வேண்டும்.