HAL நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விரையுங்கள்!!

By Gokula Preetha - February 9, 2023
14 14
Share
HAL நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விரையுங்கள்!!


HAL நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Visiting Consultant (Arthroscopy) பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் 02 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  

HAL பணியிடங்கள்:

Visiting Consultant (Arthroscopy) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே HAL நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Visiting Consultant கல்வி விவரம்:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Ortho பாடப்பிரிவில் MBBS + MS / DNB Degree முடித்தவர்கள் மட்டுமே Visiting Consultant (Arthroscopy) பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.  

HAL வயது விவரம்:

01.02.2023 அன்றைய தேதியின் படி, விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 65 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

Visiting Consultant சம்பள விவரம்:

ரூ.5,000/- Visiting Consultant (Arthroscopy) பணிக்கு என தேர்வாகும் பணியாளர்களுக்கு ஒரு வருகைக்கான சம்பளமாக கொடுக்கப்படும்.

HAL தேர்வு முறை:

Interview மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Visiting Consultant விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (23.02.2023) அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 

Download Notification & Application Form PDF
Share
...
Gokula Preetha