Visiting Consultant பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை Hindustan Aeronautics Limited (HAL) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 22.02.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தற்போது வெளியான அறிவிப்பில், HAL நிறுவனத்தில் Visiting Consultant பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Visiting Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Medical Oncology பாடப்பிரிவில் MBBS, DM, DNB பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 01.02.2023 அன்றைய நாளின் படி, 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்த HAL நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு ஒரு வருகைக்கு ரூ.5,000/- வீதம் சம்பளம் வழங்கப்படும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Visiting Consultant பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 22.02.2023 என்ற இறுதி நாளுக்குள் விரைவு தபால் செய்ய வேண்டும்.