HAL நிறுவனத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!!  

By Gokula preetha - February 6, 2023
14 14
Share
HAL நிறுவனத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!!  

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Visiting Consultant பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் 02 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.  

HAL நிறுவன பணியிடங்கள்:

HAL நிறுவனத்தில் காலியாக உள்ள Visiting Consultant பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Visiting Consultant கல்வி விவரம்:

Visiting Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MDS பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Visiting Consultant அனுபவ விவரம்:

இந்த HAL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 05 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Visiting Consultant வயது விவரம்:

Visiting Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.02.2023 அன்றைய தினத்தின் படி, 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.    

Visiting Consultant சம்பள விவரம்:

இந்த HAL நிறுவன பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் ரூ.5,000/- ஒரு வருகைக்கான சம்பளமாக பெறுவார்கள்.  

HAL நிறுவன தேர்வு செய்யும் விதம்:

Visiting Consultant பணிக்கு தகுதியான நபர்கள் Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

HAL நிறுவன விண்ணப்பிக்கும் விதம்:

இந்த HAL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (20.02.2023) தபால் செய்ய வேண்டும்.   

Download Notification & Application Link

Share
...
Gokula preetha