Medical Officer பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான GAIL India நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.93,000/- ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தற்போது வெளியான அறிவிப்பில், GAIL India நிறுவனத்தில் Medical Officer பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Medical Officer பணிக்கு அரசு அல்லது MCI / SMC அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் Surgery / General Medicine பாடப்பிரிவில் MBBS Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
இந்த GAIL India நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.93,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கான விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலுடன் இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 15 நாட்களுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.