Exim வங்கியில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள் - டிகிரி முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு!!

By Gokula Preetha - January 31, 2023
14 14
Share
Exim வங்கியில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள் - டிகிரி முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு!!


Exim Bank ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Officers பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் 10.02.2023 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Exim Bank காலிப்பணியிடங்கள்:

Officer பணிக்கு என மொத்தமாக 30 பணியிடங்கள் Exim வங்கியில் காலியாக உள்ளது.

Officer பணிக்கான கல்வி தகுதி:

இந்த Exim வங்கி பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, MBA, CA, PGDBA, Post Graduate Degree, BE, B.Tech, M.Tech, MCA, BCA, PGDM, Diploma, M.Sc, Ph.D ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை பெற்றவராக இருக்க வேண்டும்.  

Officer பணிக்கான வயது வரம்பு:

Officer பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.12.2022 அன்றைய தினத்தின் படி, 27 வயது முதல் 60 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

Officer பணிக்கான ஊதியம்:

இந்த Exim வங்கி பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.

Exim Bank தேர்வு செய்யும் முறை:

Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exim Bank விண்ணப்ப கட்டணம்:
  • General / OBC - ரூ.600/-
  • SC / ST / PWBD / EWS /  Female - ரூ.100/-      
Exim Bank விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த Exim வங்கி பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். 10.02.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.    

Download Short Notice Link
Online Application Link
Share
...
Gokula Preetha