Senior Resident பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை ESIC நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
ESIC நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Resident பணிக்கு என 03 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Senior Resident பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS + PG Degree / Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் .
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 13.01.2023 அன்றைய தினத்தின் படி, 45 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
இந்த ESIC நிறுவன பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Level 11 என்ற ஊதிய அளவின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.
13.01.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள Interview வாயிலாக இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
Senior Resident பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.