தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (ESIC) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Engineer (Civil) பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 31.03.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
ESIC நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Engineer (Civil) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Civil Engineering பாடப்பிரிவில் Degree அல்லது Diploma முடித்தவராக இருக்க வேண்டும்.
Junior Engineer (Civil) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் Building Construction & Maintenance போன்ற பணி சார்ந்த துறைகளில் JE பதவியில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
இந்த ESIC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 31.05.2023 அன்றைய தினத்தின் படி, 64 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் முந்தைய பணியின் போது பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.
Junior Engineer (Civil) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
இந்த ESIC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (31.03.2023) தபால் செய்ய வேண்டும்.