ESIC நிறுவனத்தில் ரூ.17,000/- சம்பளத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!  

By Gokula Preetha - February 20, 2023
14 14
Share
ESIC நிறுவனத்தில் ரூ.17,000/- சம்பளத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!  


ESIC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Health Assistant பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.17,000/- ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ESIC நிறுவன காலிப்பணியிடங்கள்:

Health Assistant பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ESIC நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Health Assistant கல்வி தகுதி:

இந்த ESIC நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரிகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி + 05 ஆண்டுகால அனுபவம் உள்ளவர்கள் அல்லது Science பாடப்பிரிவில் B.Sc தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Health Assistant வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Health Assistant ஊதியம்:

Health Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாதந்தோறும் ரூ.17,000/- ஊதியமாக பெறுவார்கள்.

ESIC நிறுவன தேர்வு செய்யும் முறை:

இந்த ESIC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.03.2023 அன்று அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்கள்.

ESIC நிறுவன விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து docpoojagoyal76@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 25.02.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.   

Download Notification & Application Form PDF
Share
...
Gokula Preetha