DRDO நிறுவனத்தில் காத்திருக்கும் Apprentices பணியிடம் - Degree / Diploma முடித்தவர்களுக்கான வாய்ப்பு!!

By Gokula Preetha - January 31, 2023
14 14
Share
DRDO நிறுவனத்தில் காத்திருக்கும் Apprentices பணியிடம் - Degree / Diploma முடித்தவர்களுக்கான வாய்ப்பு!!


MHRD NATS ஆனது DRDO கட்டுப்பாட்டில் உள்ள DESIDOC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Apprentices பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு என மொத்தமாக 21 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

DRDO - DESIDOC காலிப்பணியிடங்கள்:

DRDO - DESIDOC நிறுவனத்தில் Apprentices பணிக்கு என மொத்தமாக 21 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Apprentices கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் Library & Information Science, Library Science பாடப்பிரிவில் Diploma அல்லது Degree தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

Apprentices வயது வரம்பு:

Apprentices பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Apprentices உதவித்தொகை:

இந்த DRDO - DESIDOC நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.8,000/- முதல் ரூ.9,000/- வரை மாத உதவித் தொகையாக பெறுவார்கள்.

DRDO - DESIDOC தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மற்றும் Merit List என்னும் தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

DRDO - DESIDOC விண்ணப்பிக்கும் விதம்:

Apprentices பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு 21 நாட்களுக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.     

Download Notification & Application Form PDF
   
Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us