Stenography பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை தொலைத்தொடர்பு துறை (DOT) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 17.02.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க அவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தற்போது வெளியான அறிவிப்பில், தொலைத்தொடர்பு துறையில் (DOT) Stenography பணிக்கு தோராயமாக 15 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Level - 07, 08, 09, 10, 11 என்ற ஊதிய அளவின் படி Group - A, B Post கீழ்வரும் Principal Private Secretary, Private Secretary, Personal Assistant பதவிகளில் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Stenography பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 17.02.2023 அன்றைய தினத்தின் படி, 62 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.
இந்த DOT நிறுவன பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் முந்தைய பணியின் போது பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் மாத சம்பளம் பெறுவார்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த DOT நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரி மற்றும் arvindk.jha29@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 17.02.2023 என்ற இறுதி நாளுக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.