டிஜிட்டல் இந்தியா கார்ப்ரேஷன் (DIC) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Program Director, Sr. Manager / Consultant போன்ற பல்வேறு பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் 02 வருட கால ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
இந்த DIC நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 12 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் தரப்படும்.
இந்த DIC நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://ora.digitalindiacorporation.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 21.02.2023 என்பது இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.